Thursday, August 21

கவிதை

சனத்துள், மனித குலத்துள் சமைந்து பொதுவாகித்
தனித்துப் புவியில் நிலைக்கத் தகுந்த பொருளாகி
மனத்தின் அகண்ட வலைக்குள் புகுந்து சிறையாகும்
நினைப்பில் குதிர்ந்த தொகுப்பின் விளக்கம் கவியாகும்.

கணக்கில் குறித்த இடத்தில் இலக்கம் பிசகாமல்
இணக்கப் படுத்தல்.அதைப்போல் இசைத்துத் தெளிவாக
மினுக்கி மினுக்கி விதிர்த்து மதர்த்த அழகோடு
உணர்ச்சிப் பெருக்கில் நனைத்துப் பிழிந்த கவியாகும்.

பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.

தினகரன் 16.6.63

5 Comments:

At 11:08 PM , Blogger Admin said...

உங்கள் இடுகைகள் அருமை அண்ணா.
கவிதைகள் ரொம்பவே பிடித்திருக்கின்றன.

பதிவர்கள் சந்திப்பு மூலமாக உங்கள் வலைப்பதிவை அறிய முடிந்தது.

தொடருங்கள் அண்ணா..

 
At 1:16 AM , Blogger சப்ராஸ் அபூ பக்கர் said...

இன்று தான் முதல் வருகை உங்கள் தளத்திற்குள்....

அருமையான, அழகான கவிதைகள்....

வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்.. இனி அடிக்கடி கவி மழையில் நனைய வருவோம்....

 
At 5:52 PM , Blogger Paheerathan said...

பதிவர் சந்திப்பு மூலமாகத்தான் உங்கள் வலைப்பூ முகவரி கிடைத்தது.
கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன வானொலி மாமா :)

 
At 4:13 AM , Blogger மயில்வாகனம் செந்தூரன். said...

மிகவும் நல்ல படைப்புக்கள்....

எல்லா விடயங்களிலும் எமக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு நன்றிகளும் அடியேனின் வாழ்த்துக்களும்....

 
At 10:37 PM , Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home